மோடியின் நடிப்புக்கு முன் அமிதாப் ,ஷாரூக் நடிப்பு தோல்வி
மோடியின் நடிப்புக்கு முன் அமிதாப் ,ஷாரூக் நடிப்பு தோல்வி
ADDED : ஏப் 21, 2024 08:55 PM

ராஞ்சி: பிரதமர் மோடியின் நடிப்புக்கு முன் நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாரூக்கான் போன்றோர்கள் தோல்வி அடைவார்கள் என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறினார்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற இண்டியா கூட்டணி பேரணியி்ல் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வியாதவ் கலந்து கொண்டார். பேரணியில் அவர் பேசியதாவது: பிரதமர் தனது தேர்தல் வாக்குறுதிகளை மறந்து விடுகிறார், அவர் ஒரு சிறந்த நடிகர். அவரின் நடிப்பின் திறமைக்கு முன்னால் அமிதாப்பச்சன், ஷாரூக்கான் போன்றோர் தோல்வி அடைவர். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என கூறி வருகிறார் பிரதமர். அம்பேத்கரால் எழுதப்பட்ட அரசியலமைப்பு , அதை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை,
பீகாரில் கடந்த 19 ம் தேதி நடந்த நான்கு தொகுதி மட்டுமல்ல 36 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார். பீகாரில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் நான்கு தொகுதிகளில் 48.23 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை இரண்டாம் கட்டமாக 5 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

