ராணுவத்திற்கு "அக்னிவீர்" திட்டம் தேவையில்லை: என்கிறார் ராகுல்
ராணுவத்திற்கு "அக்னிவீர்" திட்டம் தேவையில்லை: என்கிறார் ராகுல்
ADDED : மே 22, 2024 02:35 PM

சண்டிகர்: ராணுவத்திற்கு 'அக்னிவீர்' திட்டம் தேவையில்லை. இது பிரதமர் அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட திட்டம் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறினார்.
ஹரியானா மாநிலம் மகேந்திரகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: விவசாயிகளின் கடனை நரேந்திர மோடி தள்ளுபடி செய்யவில்லை. அதானி, அம்பானி போன்ற கோடீஸ்வரர்களின் கடனை தள்ளுபடி செய்துள்ளனர். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பின் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும்.பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின் போது, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் பிரச்னைகள் பற்றி கேட்டறிந்தேன்.
'அக்னிவீர்' திட்டம்
ஆனால் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிடுவதில்லை. ராணுவத்திற்கு 'அக்னிவீர்' திட்டம் தேவையில்லை. இது பிரதமர் அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட திட்டம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன், இந்த திட்டத்தை குப்பை தொட்டியில் வீசும். இவ்வாறு ராகுல் பேசினார்.
நிலக்கரி ஊழல்
தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசியாவில் கொள்முதல் செய்து, உயர்தர நிலக்கரி என்ற பெயரில் 3 மடங்கு அதிக விலைக்கு 2014ல் தமிழக அரசுக்கு அதானி நிறுவனம் விற்றுள்ளது. 2014ல் அதிமுக ஆட்சியின் போது நிலக்கரின் விலை, தரத்தை உயர்த்தி காட்டுவதற்கு பல்வேறு நாடுகள் வழியாக வருவது போல் அதானி நிறுவனம் போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்துள்ளது என தனியார் செய்தித்தாள் நிறுவனம் கட்டுரை வெளியிட்டு இருந்தது.

