வியாபாரியிடம் ரூ.50 லட்சம் பறிக்கும் முயற்சி முறியடிப்பு
வியாபாரியிடம் ரூ.50 லட்சம் பறிக்கும் முயற்சி முறியடிப்பு
ADDED : ஏப் 26, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:பட்டேல் நகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம் நேற்று முன்தினம் இரவு 50 லட்ச ரூபாய் பணத்தை மிரட்டி பறிக்க ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தெரிய வந்தது.
இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ஒருவன், கர்தம் பூரி பகுதியில் தனது கூட்டாளிகளை சந்திக்க வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு ஆரிப், 24, என்பவரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து அதிநவீன கைத்துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து தொழிலதிபர் படம், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், சிறையில் அடைக்கப்பட்ட குண்டர் ஹஷிம் பாபாவின் அறிவுறுத்தலின்படி, தான் செயல்படுவதாக அரீப் போலீசாரிடம் தெரிவித்தார்.

