நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்கிம்பூர் கெரி:உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டம், தெற்கு கெரி வனப்பகுதி முகமதி ரேஞ்சில் ஒரு புலி இறந்து கிடந்தது. வனத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில், அதன் முக்கிய உறுப்புகள் அனைத்தும் அப்படியே இருந்தன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல்படி உடற்கூறு ஆய்வு செய்யப்படும் என வனத்துறை அதிகாரி சஞ்சய் பிஸ்வால் கூறினார்.
வனத்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

