பூனையை காப்பாற்ற கிணற்றில் குதித்த 5 பேர் பலி: மஹா.,வில் பரிதாபம்
பூனையை காப்பாற்ற கிணற்றில் குதித்த 5 பேர் பலி: மஹா.,வில் பரிதாபம்
ADDED : ஏப் 10, 2024 04:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: பூனையை காப்பாற்ற கிணற்றில் குதித்த 5 பேர் பரிதாபமாக பலியான சோக சம்பவம் மஹாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் வத்கி கிராமத்தில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் பூனை ஒன்று தவறி விழுந்த நிலையில், அதைக்காப்பாற்ற கிணற்றிற்குள் குதித்த நபர் உள்ளே சிக்கிக் கொண்டார்.
அவரை வெளியில் தூக்க உறவினர்கள் நால்வர் கிணற்றில் குதித்தனர். இதையடுத்து 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விஷவாயு தாக்கி அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

