"ஊழலை எதிர்த்தவர் ஊழலுக்காக சிறையில் இருக்கிறார்": கெஜ்ரிவாலை சாடிய அனுராக் தாக்கூர்
"ஊழலை எதிர்த்தவர் ஊழலுக்காக சிறையில் இருக்கிறார்": கெஜ்ரிவாலை சாடிய அனுராக் தாக்கூர்
ADDED : மார் 28, 2024 01:51 PM

புதுடில்லி: ஊழலை எதிர்த்து போராடுவேன் என்று சொன்னவர். இப்போது ஊழலுக்காக சிறையில் இருக்கிறார் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அனுராக் தாக்கூர் கூறியதாவது: ஆம் ஆத்மி, காங்கிரசுக்கு தனி சட்டங்கள் வேண்டுமா?. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கிறார். ஊழலை எதிர்த்து போராடுவேன் என்று சொன்னவர். இப்போது ஊழலுக்காக சிறையில் இருக்கிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் (அரவிந்த் கெஜ்ரிவால்) 'நான் அரசியலில் சேர மாட்டேன். என் குழந்தைகள் மீது சத்தியம் செய்கிறேன் எனக் கூறியிருந்தார்.
பின்னர் அரசியலில் சேர்ந்தார். காங்கிரஸுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறிவிட்டு, தற்போது காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளார். முன்னாள் துணை முதல்வர் கிட்டத்தட்ட 18 மாதங்கள் சிறையில் இருக்கிறார். ஊழல் செய்பவர்கள் யார் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். பா.ஜ.,வைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, எங்கள் கூட்டணிக் கட்சிகளாக இருந்தாலும் சரி ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

