ADDED : ஏப் 11, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கை:
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் அமலில் உள்ளன. விதிகளை மீறி நடப்பவர்கள் மீது, வழக்கு பதிவாகிறது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக, நேற்று (நேற்று முன்தினம்) வரை, 1,469 வழக்குகள் பதிவாகிஉள்ளன.
சகாயவாணி மற்றும் இணையதளம் வழியாக, பொதுமக்களின் குறைகள் கேட்டறிகிறோம். இதுவரை 15,792 புகார்கள் பெறப்பட்டுள்ளன. கலால்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள், போலீசார், பறக்கும் படையினர் கண்காணிக்கின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின், இதுவரை 44 கோடியே 66 லட்சத்து 34 ஆயிரத்து 643 ரூபாய் ரொக்கம் உட்பட 289.16 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகள், மதுபானம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

