தலைவர்கள் விரைவில் விடுதலை :திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் சஞ்சய் சிங்
தலைவர்கள் விரைவில் விடுதலை :திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் சஞ்சய் சிங்
UPDATED : ஏப் 03, 2024 09:10 PM
ADDED : ஏப் 03, 2024 08:55 PM

புதுடில்லி: ஆம் ஆத்மி தலைவர்கள் விரைவில் விடுதலையாவார்கள் நம்பிக்கையுடன் இருங்கள் என உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து திகார் சிறையிலிருந்து வெளியே வந்தஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் கூறினார்.
டில்லி ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கை வழக்கில் மாஜி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்.பி.,சஞ்சய்சிங், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சஞ்சய்சிங் கடந்த ஆறு மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரித்த நீதிபதி சஞ்சய்சிங்கிற்கு ஜாமின் வழங்கினார். இதையடுத்து திகார் சிறையிலிருந்து இரவு 8 மணியளவில் வெளியே வந்தார். அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். தன்னை வரவேற்க திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் சில நிமிடம் பேசினார். அப்போதுநான் விடுதலை ஆனதை கொண்டாட நேரம் இதுவல்ல. நாம் ஒவ்வொருவரும் போராட வேண்டிய நேரம இது. கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் விரைவில் விடுதலையாவார்கள்.நம்பிக்கையுடன் இருங்கள் என்றார். தொடர்ந்து முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

