/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
எஸ்.யு.வி.,- எம்.பி.வி., கார்கள்; நவ., ஏற்றுமதியில் முன்னிலை
/
எஸ்.யு.வி.,- எம்.பி.வி., கார்கள்; நவ., ஏற்றுமதியில் முன்னிலை
எஸ்.யு.வி.,- எம்.பி.வி., கார்கள்; நவ., ஏற்றுமதியில் முன்னிலை
எஸ்.யு.வி.,- எம்.பி.வி., கார்கள்; நவ., ஏற்றுமதியில் முன்னிலை
UPDATED : டிச 26, 2025 08:35 AM
ADDED : டிச 26, 2025 01:14 AM

புதுடில்லி: நம் நாட்டில் யுடிலிட்டி வெகிகிள் எனப்படும் யு.வி., கார் ஏற்றுமதி, கடந்த மாதத்தில் மற்ற வகை கார்களைவிட அதிகரித்துள்ளது.
எஸ்.யு.வி., எனப்படும் ஸ்போர்ட்ஸ் யுடிலிடி மற்றும் எம்.பி.வி., - எம்.யு.வி., ஆகிய சாலை மற்றும் சாலையல்லாத பல்வகை பயன்பாட்டு கார் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்து வருகிறது. முதன்முறை கார் வாங்க விரும்புவோர் கூட இவ்வகையான கார்களையே விரும்புகின்றனர்.
கடந்த நவம்பரில், 42,993 இந்த ரக கார்கள் ஏற்றுமதியாகின. ஆனால், மற்ற கார்களின் ஏற்றுமதி 40,519 ஆக குறைந்துள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர் அமைப்பின் தரவுகள் கூறுகின்றன. நடப்பாண்டு ஏப்ரல் - -நவம்பர் காலகட்டத்தில் 3.04 லட்சம் கார்கள் ஏற்றுமதி ஆகின. கடந்தாண்டு இது 2.71 லட்சமாக இருந்தது.
எஸ்.யு.வி., கார்களின் ஏற்றுமதி 2.88 லட்சமாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 2.22 லட்சம் மட்டுமே. நடப்பு நிதியாண்டு முழுவதிலுமே இப்போக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தரையில் இருந்து உயரம் அதிகமுள்ள, சாலை மற்றும் கரடுமுரடான பகுதிகளிலும் பயணிக்கத்தக்க கார்கள், எஸ்.யு.வி., எனப்படுகின்றன. மற்ற செடான் மற்றும் ஹேட்ச்பேக் ஆகிய கார்கள் சாலையில் பயணிக்க ஏற்றதாக கருதப்படுகின்றன.

