/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இறக்கத்தில் துவங்கி ஏற்றத்தில் முடிந்தது
/
இறக்கத்தில் துவங்கி ஏற்றத்தில் முடிந்தது
ADDED : டிச 14, 2024 12:49 AM

• வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் நல்ல ஏற்றத்துடன் நிறைவடைந்தன. நிப்டி, சென்செக்ஸ் தலா ஒரு சதவீதம் உயர்வு கண்டன. வார அடிப்படையில், தொடர்ந்து நான்காவது வாரமாக, சந்தை குறியீடுகள் உயர்வுடன் முடிவடைந்தன
• உலகளாவிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, இந்திய சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் துவங்கின. அன்னிய முதலீடுகள் மீண்டும் வெளியேற்றம், உலோகத்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விற்பனை ஆகியவற்றால், சந்தை கடுமையான சரிவை கண்டது
• எனினும், நவம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் 5.48 சதவீதமாக குறைந்ததும், வரவிருக்கும் புத்தாண்டு, பண்டிகை கால நுகர்வு அதிகரிக்கும் என்ற நம்பிக்கை காரணமாகவும், பிற்பகல் வர்த்தகத்தில், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தனர். இதனால், குறியீடுகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, கணிசமான ஏற்றத்துடன் முடிந்தன
• நிப்டி குறியீட்டில் நுகர்பொருட்கள், வங்கி மற்றும் ஐ.டி., வாகனம், எனர்ஜி உள்ளிட்ட துறைகள் சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகள் உயர்வு கண்டன.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 2,335 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கி இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.54 சதவீதம் அதிகரித்து, 73.77
அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா அதிகரித்து, 84.80 ரூபாயாக
இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
பார்தி ஏர்டெல்
ஐ.டி.சி.,
கோடக் வங்கி
ஹிந்துஸ்தான் யுனிலீவர்
அல்ட்ராடெக் சிமென்ட்
அதிக இறக்கம் கண்டவை
ஸ்ரீராம் பைனான்ஸ்
டாடா ஸ்டீல்
இண்டஸ்இண்ட் பேங்க்
ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல்
ஹிண்டால்கோ

