/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஐ.பி.ஓ., ( எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் )
/
ஐ.பி.ஓ., ( எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் )
ADDED : செப் 09, 2025 03:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ்
தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிய பங்கு வெளியீடு வாயிலாக 15,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட அக்டோபரில் வர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கடந்தாண்டு டிசம்பரில் இந்நிறுவனம் ஐ.பி.ஓ.,வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், இந்தாண்டு மார்ச்சில் செபி ஒப்புதல் அளித்திருந்தது.
அமெரிக்க வரி விதிப்பு காரணமாக சந்தை கடும் சரிவை கண்டதால், இந்நிறுவனம் தன் பங்கு வெளியீட்டை தள்ளி வைத்தது. கடந்தாண்டு அக்டோபரில் ஐ.பி.ஓ., வந்த ஹூண்டாய் நிறுவனத்துக்கு பிறகு, இரண்டாவது மிகப்பெரிய மதிப்பு கொண்ட ஐ.பி.ஓ., இதுவாகும்.