sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

ஏற்றத்துடன் முடிந்த வாரம்

/

ஏற்றத்துடன் முடிந்த வாரம்

ஏற்றத்துடன் முடிந்த வாரம்

ஏற்றத்துடன் முடிந்த வாரம்


ADDED : டிச 28, 2024 12:57 AM

Google News

ADDED : டிச 28, 2024 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

• வாரத்தின் இறுதி வர்த்தக நாளான நேற்று, நிப்டி, சென்செக்ஸ் குறியீடுகள் கணிசமான ஏற்றத்துடன் நிறைவடைந்தன

• வங்கி, வாகன துறை பங்குகள் மீது முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். எனினும், அன்னிய முதலீட்டாளர்களின் தொடர் வெளியேற்றம், ரூபாயின் வரலாறு காணாத சரிவு காரணமாக, பிற துறை பங்குகளில் எச்சரிக்கையை வெளிப்படுத்தினர்

• இம்மாத வாகன விற்பனை மீண்டெழும் என்ற நம்பிக்கையாலும், அவற்றின் பங்கு விலை நிலவரத்தாலும் இப்பிரிவில் கூடுதல் முதலீடு மேற்கொள்ளப்பட்டது

• துறை வாரியான செயல்பாடுகளை பொறுத்தவரை, மும்பை பங்குச் சந்தையில் வாகனத்துறை 0.86 சதவீதமும்; சுகாதாரத்துறை 0.79 சதவீதமும் அதிகரித்தன. உலோகம் 1.19 சதவீதமும்; எண்ணெய் மற்றும் எரிவாயு 0.94 சதவீதமும் சரிவடைந்தன

• ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட இந்த வாரத்தில், சென்செக்ஸ் 657.48 புள்ளிகளும்; நிப்டி 225.90 புள்ளிகளும் அதிகரித்துள்ளன.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 1,323 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.18 சதவீதம் அதிகரித்து, 73.39 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 பைசா குறைந்து, வரலாறு காணாத வகையில் 85.48 ரூபாயாக இருந்தது.

டாப் 5 நிப்டி 50 பங்குகள்

அதிக ஏற்றம் கண்டவை

 டாக்டர் ரெட்டி

 இண்டஸ்இண்ட் பேங்க்

 மஹிந்திரா & மஹிந்திரா

 டாடா மோட்டார்ஸ்

 எய்ச்சர் மோட்டார்ஸ்

அதிக இறக்கம் கண்டவை

 ஹிண்டால்கோ

 எஸ்.பி.ஐ.,

 கோல் இந்தியா

 ஓ.என்.ஜி.சி.,

 பெல்






      Dinamalar
      Follow us