/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
மொபைல் இறக்குமதிக்கான வரி விளக்கம்
/
மொபைல் இறக்குமதிக்கான வரி விளக்கம்
ADDED : ஜூன் 09, 2024 02:46 AM

புதுடில்லி:மொபைல் போன் டிஸ்பிளே அசெம்பிளியில் பயன்படுத்தப்படும் பாகங்களுக்கான இறக்குமதி வரியை, சி.பி.ஐ.சி., எனும், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், அதன் அறிக்கையில் தெளிவுபடுத்தி உள்ளது.
மொபைல் போன்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் டிஸ்பிளே அசெம்பிளிகளுக்கான இறக்குமதி வரி குறித்து, இறக்குமதியாளர்களிடம் குழப்பம் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவர்களை தெளிவுபடுத்துவதற்காக, சி.பி.ஐ.சி., தற்போது இறக்குமதி வரி விதிப்பு முறை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மொபைல் போன்களின் டிஸ்பிளே அசெம்பிளியில் பயன்படுத்தப்படும் டச் பேனல், எல்.இ.டி., பேக் லைட், கவர் கிளாஸ் போன்ற பாகங்களுக்கு, 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஸ்பிளே அசெம்பிளியுடன் இணைக்கப்படும் பிரேம், சிம் டிரே, பவர், வால்யும் பட்டன்கள் போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட டிஸ்பிளே அசெம்பிளிகளை, 10 சதவீத சலுகையில் இறக்குமதி செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

