/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
எஸ்.ஐ.பி., வழியை நாடும் இளைஞர்கள்
/
எஸ்.ஐ.பி., வழியை நாடும் இளைஞர்கள்
ADDED : ஏப் 15, 2024 01:05 AM

மியூச்சுவல் பண்ட்களில் எஸ்.ஐ.பி., முறையில் செய்யப்படும் முதலீடு முலமான தொகை மார்ச் மாதத்தில் புதிய உச்சம் தொட்டுள்ளது தெரியவந்துள்ளது. அண்மை காலமாக மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது தொடர்பான விழிப்புணர்வும், ஆர்வமும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மார்ச் மாதம் எஸ்.ஐ.பி., என சொல்லப்படும் சீரான முதலீடு முறையில் செய்யப்படும் முதலீடு, 19,271 கோடி ரூபாயாக புதிய உச்சம் தொட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்த நிலை தொடர்கிறது.
எஸ்.ஐ.பி., சிறு முதலீட்டாளர்களால் குறிப்பாக இளம் தலைமுறையினரால் அதிகம் விரும்பப் படுவதாக கருதப்படுகிறது. எனவே, எஸ்.ஐ.பி., மூலம் செய்யப்படும் முதலீடு மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கருதப்படுகிறது.
அண்மை காலமாக சமபங்கு நிதிகளில் அதிகம் முதலீடு செய்யப்பட்டு வந்த நிலையில், மார்ச் மாதம் ஸ்மால் கேப் நிதிகள் ஈர்ப்புடையதாக அமைவதாகவும் தெரிய வந்துள்ளது.
முதலீட்டாளர்கள் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகவும் இது கருதப்படுகிறது.
பொதுவாக எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்வது, மியூச்சுவல் பண்ட்கள் மூலம் பங்குச்சந்தையில் பங்கேற்பதற்கான சிறந்த வழியாக கருதப்படுகிறது. முதலீடு ஒழுக்கத்திற்கும் இது வழிவகுப்பதாக கருதப்படுகிறது.

