/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பேஸிக் டிமேட் கணக்கு உச்ச வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்த செபி திட்டம்
/
பேஸிக் டிமேட் கணக்கு உச்ச வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்த செபி திட்டம்
பேஸிக் டிமேட் கணக்கு உச்ச வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்த செபி திட்டம்
பேஸிக் டிமேட் கணக்கு உச்ச வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்த செபி திட்டம்
ADDED : ஜூன் 06, 2024 02:31 AM

புதுடில்லி:'பேஸிக் சர்வீஸ் டிமேட்' கணக்குகளில் ஒருவர் வைத்திருக்கக்கூடிய கடன் மற்றும் கடன் அல்லாத பத்திரங்களின் உச்சவரம்பை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்த 'செபி' திட்டமிட்டுள்ளது.
பேஸிக் சர்வீஸ் டிமேட் கணக்கை பங்குச்சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான செபி, சிறிய முதலீட்டாளர்களின் நலன் கருதி, 2012ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.
இந்த கணக்கில், ஒருவர் 2 லட்சம் ரூபாய் வரையிலான கடன் பத்திரங்களையும், 2 லட்சம் ரூபாய் வரையிலான கடன் அல்லாத பத்திரங்களையும் வைத்திருக்கலாம். தற்போது இந்த வரம்பை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்த செபி திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கடன் மற்றும் கடன் அல்லாத பத்திரங்கள் இரண்டின் ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பும், 10 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். 10 லட்சம் ரூபாயை தாண்டும் போது, இந்த கணக்கு வழக்கமான டிமேட் கணக்காக மாற்றப்படும்.
மேலும், இந்த கணக்குக்கான ஆண்டு பராமரிப்பு கட்டணத்தையும் மாற்ற செபி திட்டமிட்டுள்ளது. அதன்படி, 4 லட்சம் ரூபாய் வரையிலான கணக்குகளுக்கு, ஆண்டு கட்டணம் இல்லை.
நான்கு முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான கணக்குகளுக்கு, கட்டணமாக 100 ரூபாய் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு குறித்த தங்களின் கருத்துக்களை, முதலீட்டாளர்கள் வரும் 26ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு செபி கேட்டுக்கொண்டுள்ளது.
என்.எஸ்.இ., உலக சாதனை
நேற்று ஒரே நாளில், 1,971 கோடி பரிவர்த்தனைகளை கையாண்டதன் வாயிலாக, தேசிய பங்குச்சந்தை உலக சாதனை படைத்துள்ளது.

