ADDED : மார் 23, 2024 01:30 AM

கடந்த 2014ம் ஆண்டு துவங்கப்பட்ட கிரியேட்டிவ் கிராபிக்ஸ் சொல்யூஷன்ஸ், 'பிளேக்சோ பிரின்டிங் பிளேட்ஸ்' தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அச்சிடும் இயந்திரங்களுக்கான பல்வேறு விதமான அச்சு தட்டுகளை இந்நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழகம், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா மற்றும் குஜராத் ஆகியவற்றில், ஏழு தயாரிப்பு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
நிதி நிலவரம்
கடந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 4,846 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 724 கோடி ரூபாய்.
துவங்கும் நாள் : 28.03.24
முடியும் நாள் : 04.04.24
பட்டியலிடும் நாள் : 09.04.24
பட்டியலிடப்படும் சந்தை : என்.எஸ்.இ., - எஸ்.எம்.இ.,
பங்கு விலை : ரூ.80 - 85
பங்கின் முகமதிப்பு : ரூ.10
புதிய பங்கு விற்பனை : ரூ.54.40 கோடி
திரட்டப்படவுள்ள நிதி : ரூ.54.40 கோடி

