/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ரூ.25,000 கோடிக்கு இயந்திரங்கள் துணிகள் ஏற்றுமதி அதிகரிக்கும்
/
ரூ.25,000 கோடிக்கு இயந்திரங்கள் துணிகள் ஏற்றுமதி அதிகரிக்கும்
ரூ.25,000 கோடிக்கு இயந்திரங்கள் துணிகள் ஏற்றுமதி அதிகரிக்கும்
ரூ.25,000 கோடிக்கு இயந்திரங்கள் துணிகள் ஏற்றுமதி அதிகரிக்கும்
ADDED : ஜூன் 09, 2024 02:47 AM

கோவை:கடந்த 3 ஆண்டுகளில், 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் இறக்குமதி ஆகியிருப்பதால், 'ரெடி டு கட்' துணி ஏற்றுமதி, பல மடங்கு அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் உள்ளிட்ட சில முக்கியக் காரணங்களால், உலகிலுள்ள பல்வேறு நாடுகளும், 'ரெடி டு கட்' என்று கூறப்படும் நெசவு செய்யப்பட்டு, சாயமேற்றப்பட்ட துணிகளை, வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன.
அங்குள்ள நிறுவனங்கள், இந்த துணிகளை வாங்கி, ஆயத்த ஆடைகளை தயார் செய்வதை வழக்கமாக வைத்துஉள்ளன.
ஆட்டோமேட்டிக் தறிகள்
இந்தியாவிலிருந்து, 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான பருத்தி, பாலியஸ்டர் உள்ளிட்ட நெசவு செய்யப்பட்ட துணிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சீனா ஆண்டுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான துணிகளை ஏற்றுமதி செய்து வருகிறது.
சீனாவில் ஜவுளித்துறையில் ஏற்பட்டு வரும் நவீன மாற்றங்கள், இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அங்கு அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த மூன்றாண்டுகளில், 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான அதி நவீன இயந்திரங்கள், இந்தியாவில் இறக்குமதி செய்திருப்பது, இதன் அவசியத்தை ஜவுளித்துறையினர் உணர்ந்து இருப்பதை உறுதி செய்து உள்ளது.
அதிலும் 15,700 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், ஆட்டோமேட்டிக் தறிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இவ்வமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள், 'சீனா ப்ளஸ் ஒன்' என்ற முயற்சியை தீவிரப்படுத்தும் வகையில், பலவிதமான துணி மாதிரிகளை இந்திய உற்பத்தியாளர்களுக்கு அனுப்பி, தயாரிப்பில் ஈடுபடும்படி கேட்டுக்கொண்டுள்ளன.
'ரெடி டு கட்' துணி
இந்த முயற்சியும், அதன் பலன்களும் அடுத்த 10 ஆண்டுகள் தொடருமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மத்திய, மாநில அரசுகளும், 'ரெடி டு கட்' துணி தயாரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த முயலும் நிறுவனங்களுக்கு, சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி, ஊக்கப்படுத்த வேண்டும்.
நவீன மயமாக்குதல், தரமான உற்பத்திக் கட்டமைப்புடன், பல வகைகளிலான துணி வகை களை உற்பத்தி செய்யும் திறனை மேம்படுத்தி, புதிய சந்தைகளை கைப்பற்றுவதற்கு தொடர் முயற்சிகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு, ஐ.டி.எப்., கன்வீனர் தெரிவித்தார்.

