/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
உள்ளீட்டு பொருட்களுக்கான வரி குறைப்பது குறித்து பரிசீலனை
/
உள்ளீட்டு பொருட்களுக்கான வரி குறைப்பது குறித்து பரிசீலனை
உள்ளீட்டு பொருட்களுக்கான வரி குறைப்பது குறித்து பரிசீலனை
உள்ளீட்டு பொருட்களுக்கான வரி குறைப்பது குறித்து பரிசீலனை
ADDED : மே 22, 2024 11:11 PM

புதுடில்லி: சில பொருட்களை தயாரிப்பதற்கான உள்ளீட்டு பொருட்களுக்கான வரி, தயாரித்து முழுமையடைந்த பொருட்களுக்கான வரியை விட அதிகமாக இருப்பதாக, எழுந்திருக்கும் புகார்களை அடுத்து, வரி அமைப்பில் சில மாறுதல் செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
இதையடுத்து மரச்சாமான்கள், சலவை இயந்திரங்கள், ஏர் பியூரிபையர்கள் போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உள்ளீட்டு பொருட்களுக்கான வரியை குறைப்பது தொடர்பாக அரசு பரிசீலிக்கலாம் என, மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், நிதி அமைச்சகத்துக்கு குறிப்பிட்ட பொருட்களின் பட்டியலை அனுப்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொழில்துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்புகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே, இந்த பட்டியல் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.