ADDED : அக் 10, 2024 09:27 PM

புதுடில்லி:மேம்பட்ட 'ஜிங்க் ஏர் பேட்டரி' தொழில்நுட்பத்தை உருவாக்கும் வகையில், மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக, 'வேதாந்தா' குழும நிறுவனமான 'ஹிந்துஸ்தான் ஜிங்க்' தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் தெரிவித்திருப்பதாவது:
இறக்குமதி செய்யப்படும் அதிக விலையுடைய 'லித்தியம் அயான்' பேட்டரிகள் தற்போது சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
இதற்கு மாற்றாக, குறைந்த செலவிலான, ரீசார்ஜ் செய்யத்தகுந்த ஜிங்க் ஏர் பேட்டரியானது, ஆற்றல் சேமிப்பின் எதிர்காலத்தை மறுவரையறை செய்வதாக இருக்கும்.
ஒரு கிலோவாட் மின்சாரத்தை ரீசார்ஜ் செய்யக்கூடிய வகையில், மேம்பட்ட ஜிங்க் ஏர் பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்கும் நோக்குடன் மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து கூட்டு ஆராய்ச்சி முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. ஜிங்க் அடிப்படையிலான பேட்டரி தொழில்நுட்பம் குறித்த இந்த கூட்டாண்மையானது, எரிசக்தி ஆற்றல் சேமிப்பு துறையின் பரிமாண வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும்.
இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

