ADDED : டிச 19, 2025 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : உதயம் பருப்பு ரகங்களை விற்பனை செய்யும் ' உதயம்ஸ் அக்ரோ புட்ஸ்' நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரொடக்ட்ஸ் கையகப்படுத்தியுள்ளது.
உதயம்ஸ் அக்ரோ புட்ஸ் நிறுவனர்களுக்கு இனி அந்நிறுவனத்தில் குறைந்த பங்குகள் இருக்கும் எனவும், உதயம் தயாரிப்புகளின் விற்பனை நாடெங்கும் பரவலாக்கப்படும் எனவும் ரிலையன்ஸ் கூறியுள்ளது.
தற்போது உதயம் எனும் பெயரில் தானியங்கள், சர்க்கரை, சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், இட்லி மாவு முதலியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

