எகிறிய டிராக்டர் விற்பனை ஆகஸ்டில் 25 சதவிகிதம் உயர்வு
எகிறிய டிராக்டர் விற்பனை ஆகஸ்டில் 25 சதவிகிதம் உயர்வு
ADDED : செப் 14, 2025 11:08 PM

சென்னை:கடந்த ஆகஸ்ட் மாதத்தில், டிராக்டர் விற்பனை, 25 சதவீதம் உயர்ந்து நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட்டில் 54,733 டிராக்டர்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு ஆகஸ்ட்டில் 73 ,199 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நல்ல பருவமழை, குறைந்த கடன் வட்டி, கிராமப்புற தேவை அதிகரிப்பு ஆகியவையின் காரணமாக, பயிர் சாகுபடி உயர்ந்தது. அரசு திட்டங்கள், குறைந்த வட்டியுடன் கடன் ஆகியவை டிராக்டர் விற்பனைக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
விவசாயிகள் தொழில்நுட்பம் சார்ந்த விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். அதிக ஏக்கர் அறுவடையால், நல்ல வருமானம் கிடைப்பதால், டிராக்டர் விற்பனை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. விவசாய உபகணரங்களின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரிப்பதால், இந்தியா, உலகின் ஏற்றுமதி மையமாக மாற அதிக வாய்ப்பு உள்ளது.
தற்போது, டிராக்டர்களுக்கான ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளதால், வரும் பண்டிகை காலத்தில் டிராக்டர் விற்பனை எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.