ADDED : செப் 10, 2025 11:20 PM

250
பு தைபடிம எரிபொருள் இல்லாத, காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்ட நாட்டின் பசுமை மின்சார உற்பத்தித் திறன் 250 கிகா வாட் ஆக அதிகரித்துள்ளது என புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார்.
2014ம் ஆண்டில், பசுமை மின்உற்பத்தி 81 ஜிகா வாட் ஆக இருந்ததாகவும், அது அதிவேக வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், இன்னும் ஐந்து ஆண்டுகளில் 500 ஜிகா வாட் ஆக, அதாவது இருமடங்காக அதிகரிக்க இலக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2,30,000
ஆ ப்பிள் ஐபோன் 17 மாடல் போன், வரும் 19ம் தேதி இந்தியா சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், அதன் விலை 82,900 ரூபாயில் இருந்து 2.30 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத, மிக மெலிதான போனை ஐபோன் ஏர் சீரிஸ் என்ற பெயரில் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. இதன் தடிமன் 5.6 மில்லி மீட்டர் மட்டுமே; சிம் கார்டு தேவையின்றி, இ-சிம் மட்டுமே இதில் பயன்படுத்த முடியும்.