sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 20, 2026 ,பங்குனி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 எண்கள்

/

 எண்கள்

 எண்கள்

 எண்கள்


ADDED : மார் 20, 2026 01:35 AM

Google News

ADDED : மார் 20, 2026 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

70,000




'ஆ ர்சிலர் மிட்டல்' மற்றும் 'நிப்பான் ஸ்டீல் இந்தியா' நிறுவனங்கள் இணைந்து, ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே ஒருங்கிணைந்த ஸ்டீல் ஆலைக்கு அடுத்த வாரம் அடிக்கல் நாட்ட உள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டீல் ஆலை என கூறப்படும் இதில், முதற்கட்டமாக 70,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டுக்கு 82 லட்சம் டன் ஸ்டீல் உற்பத்தி செய்வதற்கான உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2028 இறுதிக்குள் ஒரு பகுதி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும்; 2030க்குள் முழுமையான செயல்பாடுகளை துவக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆலை அமைக்க ஆந்திர அரசு கிட்டத்தட்ட 2,200 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது.

10,00,000


இ லங்கையின் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தில், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 20 அடி நீளம் கொண்ட 10 லட்சம் சரக்கு கன்டெய்னர்களை கையாண்டுள்ளதாக, 'அதானி போர்ட்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை துறைமுக ஆணையம், அந்நாட்டின் 'ஜான் கீல்ஸ் ஹோல்டிங்க்ஸ்' வணிக குழுமம் ஆகியவற்றுடன் அதானி நிறுவனம் இணைந்து கிட்டத்தட்ட 6,800 கோடி ரூபாய் மதிப்பில் இந்த முனையத்தை அமைத்தது.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் செயல்பாட்டுக்கு வந்த இந்த முனையம், அதன் முதலாம் ஆண்டிலேயே அதிக கன்டெய்னர்களை கையாண்டு சாதனை படைத்துள்ளதாக, அதானி போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us