ADDED : டிச 25, 2025 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு, நம் நாட்டில் கடுகு பயிர் சாகுபடி பரப்பு 4.30 சதவீதம் அதிகரித்திருப்பதாக, எண்ணெய் உற்பத்தியாளர் சங்கமான எஸ்.இ.ஏ.,வுக்காக அக்ரிவாட்ச் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் பயிர் செய்ததே, கடுகு பயிரிடப்பட்டுள்ள பரப்பு அதிகரிக்க காரணமானது.
ஆய்வு நடத்தப்பட்ட மாநிலங்களில், கடுகு பயிர்களுக்கு பூச்சிகளால் பாதிப்பு, பொருளாதார இழப்பை ஏற்படுத்தாத அளவில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் 15 வரை, 84.67 லட்சம் ஹெக்டேர் பரப்பில் கடுகு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இது கடந்த ஓராண்டுக்கு முன் இதே காலகட்டத்தில் 81.16 லட்சம் ஹெக்டேராக இருந்தது.

