ADDED : ஜன 01, 2026 01:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில், அதிக சரக்கு ஏற்றுமதி செய்த மாவட்டங்களின் பட்டியலில், தேசிய அளவில் காஞ்சிபுரம் இராண்டாவது இடம் பிடித்துள்ளது. மின்னணு பொருட்கள், வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
முதலிடத்தில், குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் உள்ளது. புனே, உத்தர பிரதேசத்தின் கவுதம் புத்த நகர் மற்றும் பெங்களூரு நகர்ப்புறம் ஆகியவை முறையே மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ளன. மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

