முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.30 லட்சம் கோடியாக உயர்வு
முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.30 லட்சம் கோடியாக உயர்வு
ADDED : டிச 31, 2025 01:06 AM

நடப்பாண்டில், பல சவால்களுக்கு மத்தியிலும் மும்பை பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 30.20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது.
டிச., 29ம் தேதி வரை, சென்செக்ஸ் 8.39 சதவீதம் அதிகரித்து 6,556 புள்ளிகள் ஏற்றம் கண்டது. டிச., 1ம் தேதி இதுவரை இல்லாத அளவாக, சென்செக்ஸ் 86,159 புள்ளிகளை எட்டியது.
இதன் காரணமாக, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த மதிப்பு 472 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அன்னிய முதலீடுகள் வெளியேறினாலும், உள்நாட்டில் எஸ்.ஐ.பி., முதலீடுகள் சந்தையை தாங்கிப் பிடித்தன. மேலும், இந்த ஆண்டு பல புதிய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் நுழைந்ததும் வளர்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர, உட்கட்டமைப்பு வசதிகளுக்காக அரசின் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு, இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி மீதான நம்பிக்கையும் சந்தை ஏற்றத்துக்கு காரணம் எனவும் துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
டாப் 5 நிறுவனங்கள் (மதிப்பு அடிப்படையில்)
* ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
* எச்.டி.எப்.சி., வங்கி
* பார்தி ஏர்டெல்
* டி.சி.எஸ்.,
* ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி
நடப்பாண்டின் மெ கா ஐ.பி.ஓ.,க்கள்
டாடா கேபிடல் - ரூ. 15,512 கோடி
எச்.டி.பி., பைனான்சியல் - ரூ. 12,500 கோடி
எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் இந்தியா - ரூ. 11,607 கோடி

