ADDED : டிச 22, 2025 02:12 AM

புதுடில்லி: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக்குவாரி மற்றும் பிற பங்குதாரர்களிடம் இருந்து, வைப்ரன்ட் எனர்ஜி நிறுவனத்தை முழுமையாக வாங்குவதற்கான ஒப்பந்தத்தில், ஐநாக்ஸ் கிளீன் எனர்ஜி கையெழுத்திட்டுள்ளது.
உ.பி.,யின் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி நிறுவனமான ஐநாக்ஸ் கிளீன் எனர்ஜி, கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாய்க்கு வைப்ரன்ட் நிறுவனத்தை கையகப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
ம.பி., மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வைப்ரன்ட் எனர்ஜி நிறுவனத்துக்கு சொந்தமாக, 1,337 மெகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. 800 மெகாவாட் மின் உற்பத்தி செயல்பாட்டில் உள்ளது. இவையனைத்தும் ஐநாக்ஸ் கிளீன் எனர்ஜி நிறுவனத்தின் கீழ் வரவுள்ளன.
இது குறித்து ஐநாக்ஸ் கிளீன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவான்ஷ் கூறியதாவது:
இந்த கையகப்படுத்துதல் வாயிலாக இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் 3 ஜிகாவாட்டாக அதிகரிக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

