ADDED : செப் 14, 2025 12:51 AM

புதுடில்லி:வருமான வரித் தாக்கலுக்கு இன்றும் நாளையும் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில், இதுவரை 6 கோடி பேர் கணக்கு தாக்கல் செய்திருப்பதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டான 2024 - 25க்கான வருமான கணக்கை தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். ஜூலை 31ம் தேதியுடன் கெடு நிறைவடைவது வழக்கம் என்ற நிலையில், கணக்கு தாக்கலில் அரசு மேற்கொண்ட மாற்றங்கள், வரி படிவங்கள் எளிமைப்படுத்தல் மற்றும் இணையதள மேம்பாடு ஆகிய காரணங்களால், செப்., 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து வருமான வரித் துறை, தனது சமூக வலைத்தள பக்கத்தில், வரி செலுத்துவோர், 'வரி வசூலிப்பு அதிகாரிகளுக்கு நன்றி; 6 கோடி கணக்குகள் தாக்கல் என்ற மைல்கல்லை எட்ட உதவியுள்ளீர்கள்; வருமான கணக்கு தாக்கல் தொடர்ந்து நடைபெறுகிறது' என்று தெரிவ ி த்துள்ளது.
வரிக் கணக்கு தாக்கலுக்கான கெடுவை நீட்டிக்க கோரிக்கைகள் எழுந்த நிலையில், இதனை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது.