ADDED : டிச 19, 2025 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,:குறைவாக வரி செலுத்தியிருப்பதாக கூறி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு 238 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில், 216 கோடி வரியும், 21.60 கோடி அபராதமும் அடங்கும்.
முந்தைய காலத்தில் வந்த உத்தரவை எதிர்த்து ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வழக்கு தொடர்ந்த நிலையில், இப்போதைய ஜி.எஸ்.டி., அமைப்பின் உத்தரவையும் எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்ய போவதாக ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி., வரியை குறைவாக செலுத்தியதற்காக இந்த உத்தரவை வரித்துறை பிறப்பித்துள்ளதாக அந்த வங்கி கூறியுள்ளது.

