sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ஜி.எஸ்.டி.,2.0: முடிவல்ல, தொடர்ச்சியின் மைல்கல்

/

ஜி.எஸ்.டி.,2.0: முடிவல்ல, தொடர்ச்சியின் மைல்கல்

ஜி.எஸ்.டி.,2.0: முடிவல்ல, தொடர்ச்சியின் மைல்கல்

ஜி.எஸ்.டி.,2.0: முடிவல்ல, தொடர்ச்சியின் மைல்கல்


ADDED : செப் 11, 2025 12:16 AM

Google News

ADDED : செப் 11, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சரக்கு மற்றும் சேவைகள் வரி கவுன்சிலின் 56வது கூட்டம், தற்போதுள்ள 4 அடுக்கு வரி விகிதத்தை குடிமக்களுக்கு உகந்த எளிய வரியாக இரண்டு அடுக்கு வரி விகிதமாக மாற்றியுள்ளது. 18 சதவீத நிலையான வரி விகிதம் மற்றும் 5 சதவீத தகுதி வரி விகிதம் என, இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தகுதி நீக்கப்பட்ட சிறப்பு விகிதம் தெரிவு செய்யப்பட்ட சில சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படும். புகையிலை பொருட்களை தவிர்த்து மற்ற அனைத்து சரக்கு மற்றும் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி., விகித மாற்றங்கள், வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

வருவாய் இழப்பு


இந்த வரி விகிதங்களின் மாற்றத்தால், அரசுக்கு சுமார் 48,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வருவாய் இழப்பு இணக்கமுறை ஊக்கங்கள், வலுவான நுகர்வு ஆகியவற்றால், குறுகிய காலத்தில் சரிசெய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் ஜி.எஸ்.டி., சீரமைப்பு காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பு ஒரு சில மாதங்களில் சரி செய்யப்பட்டதை, கடந்த காலவரலாறு காட்டுகிறது.

எனவே, இந்த வருவாய் இழப்பு பற்றி விமர்சனம் செய்பவர்கள் கடந்த கால தரவுகளை பார்த்து சரி செய்து கொள்ளலாம்.இந்த ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களை இதன் அமலாக்கத்தின் முதல் நாளில் இருந்தே செயல்படுத்தியிருக்கலாம் என்று சிலர் விவாதம் செய்கின்றனர்.201௭-ல் லோ ஜி.எஸ்.டி., அமலாக்கம் செய்யப்பட்டது உட்பட, இந்தியாவின் வரி சீர்திருத்தங்களின் பரிணாம வளர்ச்சியை பரிசீலிப்பது இதற்கு தகுதியுடையதாக இருக்கும். 2016ல் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தின் 101வது திருத்தம் மற்றும் ஜி.எஸ்.டி., கவுன்சில் செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இந்த அடிப்படையில், தற்போது இந்த கவுன்சில் 5 விகிதங்களை 2 விகிதங்களாக மாற்றியுள்ளது. மேலும் மத்திய அரசும் 28 மாநிலங்களும் ஒருங்கிணைந்து ஒருமித்த கருத்தோடுதான் இந்த மாற்றங்களை செய்துள்ளன.

விலை குறையும்


ஜி.எஸ்.டி., விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டதால், வீட்டு உபயோக பொருட்கள் வாயிலாக நேரடி பயன் கிடைக்கும். குறிப்பாக, உணவு, ஆடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் வரிவிகிதம் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சில்லரை விலை குறையும் என்பதோடு பணவீக்க விகிதமும் கணிசமாக குறையும். நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்க விகிதம் தற்போதுள்ள நிலையிலிருந்து ஒரு சதவீதத்துக்கும் அதிகமாக குறையும் வாய்ப்பு உள்ளது.

பொருளாதார தளத்தில் நிதி பற்றாக்குறை மீதான தாக்கம் பெருமளவு குறையும். வங்கிகளை பொறுத்தவரை செயல்பாட்டு செலவுகள் குறைவதால், அவற்றின் லாபம் அதிகரித்து வலுவான பொருளாதார தளத்தை உருவாக்கும்.

காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசிகள் மீது வரி இல்லாததால், ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டு துறைகளின் பரவலாக்க விகிதம் அதிகரிக்கும். எனவே, ஜி.எஸ்.டி., 2.0 என்பது ஒரு முடிவல்ல. தொடர்ச்சியான சீர்திருத்த நடைமுறையில் ஒரு மைல் கல்லாகும் என்று பார்ப்பது சிறப்பானது.

- செளமியா காந்தி கோஷ்,

16வது நிதிக்குழு உறுப்பினர்,

பிரதமரின் பொருளாதார

ஆலோசனைக் குழு உறுப்பினர்,

பாரத ஸ்டேட் வங்கியின்

பொருளாதார தலைமை ஆலோசகர்.






      Dinamalar
      Follow us