ADDED : டிச 21, 2025 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: புதிய ஆலை அமைப்பதற்காக, சுப்ராஷ் டெவலப்பர்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனத்தை, 146 கோடி ரூபாய்க்கு கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன் கையகப்படுத்தி உள்ளது.
கோவையை சேர்ந்த கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன், வாகன இன்ஜின் உதிரிபாகங்கள், கியர் பாக்ஸ் உள்ளிட்ட பொறியியல் சார்ந்த தன் துணை நிறுவனமான டி.ஆர்.,ஆக்ஸியன் இந்தியா, சுப்ராஷ் டெலவப்பர்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை, 146 கோ டி ரூபாய்க்கு வாங்குவதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதன் வாயிலாக, சுப்ராஷ் டெவலப்பர்ஸின் துணை நிறுவனமான ஸ்ரீகர டெக்னாலஜிஸ் நிறுவனத்தை மறைமுகமாக கையகப்படுத்தி உள்ளது. இந்நிறுவனத்துக்கு சொந்தமாக ஸ்ரீபெரும்புதுார் அடுத்த அரனேரியில் 52.83 ஏக்கர் நிலம் உள்ளது.

