தொழில் வளர் காப்பகம் ஸ்டார்ட் அப் டி.என்., அழைப்பு
தொழில் வளர் காப்பகம் ஸ்டார்ட் அப் டி.என்., அழைப்பு
ADDED : மார் 08, 2026 01:58 AM

சென்னை:ஸ்டார்ட்அப் ஊக்குவிப்பு அமைப்புகளுக்கு தொழில் வளர் காப்பகம் உருவாக்க ஆர்வம் உள்ள கல்வி நிறுவனங்கள் முன்வருமாறு ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
மாநிலம் முழுதும் ஸ்டார்ட் அப் துவக்குவதை ஊக்குவிக்க இரண்டாம், மூன்றாம், நான்காம் நிலை நகரங்களில் இயங்கும் கல்வி நிறுவனங்கள், புத்தொழில் ஊக்குவிப்பு அமைப்பினர் வாயிலாக துவக்க நிலை தொழில் வளர் காப்பக மையம் அமைக்க, ஸ்டார்ட் அப் டி.என்., ஆதரவு அளிக்கிறது.
இம்மையம் அமைக்க, 7.50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, இளம் தலைமுறையினர் இடையே தொழில்முனைவு சிந்தனை உருவாக்க உதவி செய்யப்படுகிறது.
தற்போது, தொழில் வளர் காப்பகம் உருவாக்க ஆர்வம் உள்ள கல்வி நிறுவனங்கள், புத்தொழில் ஊக்குவிப்பு அமைப்புகளுக்கு, ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு வரும், 30ம் தேதிக்குள், 'form.startuptn.in/NPC' என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
