ADDED : மே 25, 2024 01:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'அல்ட்ராடெக் சிமென்ட், ஆதித்ய பிர்லா கேபிட்டல், வோடபோன் ஐடியா' போன்ற நிறுவனங்களை நடத்தி வரும் ஆதித்ய பிர்லா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு, நேற்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில், 100 பில்லியன் டாலர் அதாவது 8.30 லட்சம் கோடி ரூபாயை தாண்டி, 8.51 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
இக்குழுமத்தின் கீழ் உள்ள 'கிராசிம்' நிறுவனத்தின் சந்தை மதிப்பு, கடந்த மூன்று ஆண்டு களில், இரு மடங்கு உயர்ந்துள்ளது. இதேபோல், 'ஹிண்டால்கோ' நிறுவனத்தின் மதிப்பு, இரண்டு ஆண்டுகளில், இரு மடங்கு அதிகரித்து உள்ளது.
வோடபோன் ஐடியா, 'செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ்' நிறுவனங்களின் சந்தை மதிப்பு, கடந்த ஓராண்டில், மும்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

