/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
வட்டி விகித குறைப்பு பற்றி புதிய கணிப்பு
/
வட்டி விகித குறைப்பு பற்றி புதிய கணிப்பு
ADDED : பிப் 05, 2024 12:22 AM

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் தொடர்பான தற்போதைய நிலையை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிய வந்து உள்ளது.
ரெப்போ வங்கி விகிதம் தற்போது, 6.5 சதவீதமாக இருக்கிறது. கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பின் ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லாத போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலை வரும் மாதங்களில் தொடரும் என பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.
அண்மையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பொருளாதார வல்லுனர்கள் மத்தியில் நடத்திய கருத்துக்கணிப்பில், ரிசர்வ் வங்கி தற்போதைய விகிதத்தை தொடரும் முடிவை மேற்கொள்ளும் என பெரும்பாலான வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இம்மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் தற்போதைய நிலை தொடரும் முடிவு மேற்கொள்ளப்பட வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளனர்.
பெரும்பாலான வல்லுனர்கள் மூன்றாம் காலாண்டு வரை இதே நிலை தொடரும் என்றும், மூன்றாம் காலாண்டில் முதல் வட்டி விகித குறைப்பை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அமெரிக்க மத்திய வங்கி அடுத்த காலாண்டே வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

