/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மனைவி மர்மச்சாவு கணவரிடம் விசாரணை

 மனைவி மர்மச்சாவு கணவரிடம் விசாரணை

 மனைவி மர்மச்சாவு கணவரிடம் விசாரணை

 மனைவி மர்மச்சாவு கணவரிடம் விசாரணை

 மனைவி மர்மச்சாவு கணவரிடம் விசாரணை

ADDED : பிப் 16, 2026 06:17 AM


Google News
Latest Tamil News
சித்ரதுர்கா: கள்ளத்தொடர்பை கைவிடும்படி கணவனுக்கு புத்திமதி கூறிய மனைவி, துாக்கில் பிணமாக தொங்கினார். கணவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சித்ரதுர்கா மாவட்டம், சல்லகெரே தாலுகாவின் கட்டபாரதி கிராமத்தை சேர்ந்தவர்கள் திருமல்லேஷ் - பாக்யா தம்பதி. 2016ல் இவர்களுக்கு திருமணம் நடந்தது.

திருமணமான சில ஆண்டுகளில், திருமல்லேசுக்கு, வேறு பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பது பாக்யாவுக்கு தெரியவந்தது.

இது தொடர்பாக தம்பதி அடிக்கடி சண்டை போட்டு வந்தனர். இவ்விஷயம் போலீஸ் நிலையம் வரை சென்றது.

அப்போது போலீசிடம், 'இனி இதுபோன்று நடந்து கொள்ளமாட்டேன்' என்று எழுத்து பூர்வமாக திருமல்லேஷ் எழுதி கொடுத்துள்ளார். ஆனாலும், கள்ளத்தொடர்பை விடவில்லை.

நேற்று முன்தினம் பாக்யாவின் குடும்பத்திற்கு போன் செய்த திருமல்லேஷ், பாக்யா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தனர். பாக்யாவின் சகோதரர் அஜ்ஜப்பாவும், பெற்றோரும் வந்தனர்.

பாக்யாவின் கழுத்தில் இருக்கும் காயங்களை பார்த்த அஜ்ஜப்பா, போலீசில் புகார் அளித்தார். திருமல்லேஷ் மீது வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.