/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மன்னிப்பு கடிதம் அனுப்பவில்லை எத்னால் தன்னிலை விளக்கம்
/
மன்னிப்பு கடிதம் அனுப்பவில்லை எத்னால் தன்னிலை விளக்கம்
மன்னிப்பு கடிதம் அனுப்பவில்லை எத்னால் தன்னிலை விளக்கம்
மன்னிப்பு கடிதம் அனுப்பவில்லை எத்னால் தன்னிலை விளக்கம்
ADDED : மே 09, 2025 12:42 AM

பெங்களூரு: ''மன்னிப்பு கேட்டு கட்சி மேலிடத்துக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை,'' என பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார்.
கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திராவையும், அவரது தந்தை எடியூரப்பாவையும் தொடர்ந்து விமர்சித்து வந்த பசனகவுடா பாட்டீல் எத்னாலை, பா.ஜ.,விலிருந்து ஆறு ஆண்டுகள் நீக்கி உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில், எத்னால், மன்னிப்பு கேட்டு, கட்சி மேலிடத்துக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் பரவின.
இதற்கு விளக்கம் அளித்து, விதான் சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மன்னிப்பு கேட்டு, கட்சி மேலிடத்துக்கு எந்த கடிதமும் நான் அனுப்பவில்லை. கட்சிக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில், எந்த விஷயமும் செய்யவில்லை. கட்சியின் வரம்புக்கு உட்பட்டே நடப்பேன். நான் எங்கும் ஓடிப்போகவில்லை. என் மீது தவறு உள்ளது என்பதற்கான ஆதாரம் இருந்தால், அறிக்கை தயார் செய்யுங்கள்.
ராஜினாமா எப்படி செய்ய வேண்டும் என்ற சாதாரண கிராம பஞ்சாயத்து உறுப்பினருக்கு தெரியும் விஷயம், ஆறு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டும், அமைச்சர் சிவானந்த பாட்டீலுக்கு தெரியாதது ஆச்சரியமாக உள்ளது. எந்த ஊரில் நிபந்தனை விதித்து ராஜினாமா செய்வர். இது அனைத்தும் 'டிராமா' தான். எதற்காக நான் ராஜினாமா செய்ய வேண்டும். நான் ராஜினாமா செய்வதாக கூறவில்லை. அவர் ராஜினாமா செய்தால் செய்யட்டும்.
ஊழல் செய்ததன் மூலம் அவர்களிடம் பணம் அதிகளவில் உள்ளது. அவர்கள் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால், ராஜினாமா செய்யட்டும். அவர்களுக்கு எதிராக நான் போட்டியிடுவேன். சவால் விடுவதில் எனக்கு பயம் இல்லை.
இவ்வாறு அவர்கூறினார்.

