தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தர்பூசணி, திராட்சை மேளா தயாராகும் 'ஹாப்காம்ஸ்'

 தர்பூசணி, திராட்சை மேளா தயாராகும் 'ஹாப்காம்ஸ்'

 தர்பூசணி, திராட்சை மேளா தயாராகும் 'ஹாப்காம்ஸ்'


ADDED : மார் 03, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 06:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் தர்பூசணி மற்றும் திராட்சை மேளா நடத்த, ஹாப்காம்ஸ் தயாராகி வருகிறது.

இதுதொடர்பாக ஹாப்காம்ஸ் அதிகாரிகள் கூறியதாவது:

இம்முறை தர்பூசணி மற்றும் திராட்சை பழங்களின் விளைச்சலுக்கு, சாதகமான சூழ்நிலை இருந்தது. அமோகமாக மகசூல் வந்துள்ளது.

கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தாம்சன் சீட்லெஸ், சரத், கிருஷ்ண சரத், பிளேம், குளோப், சோனிகா உட்பட பல விதமான சுவையான திராட்சைகள், மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்துள்ளன.

வழக்கம் போல இம்முறையும், ஹாம்காம்சின் அனைத்து கடைகளிலும், 10 சதவீதம் தள்ளுபடி விலையில், தர்பூசணி, திராட்சை பழங்களை விற்க முடிவு செய்துள்ளோம். பெங்களூரு முழுதும் நடமாடும் வாகனங்கள் மூலம், தர்பூசணி, திராட்சை விற்கப்படும். பழங்களின் இருப்புக்கு தகுந்தபடி கடைகள் திறக்கப்படும்.

விஜயபுரா, பாகல்கோட், பெலகாவி, கதக் உட்பட, பல இடங்களில் இருந்து, பல விதமான திராட்சைகள் வருகின்றன.

பெங்களூரு ரூரல் பகுதியில் இருந்து, பெங்களூரு ப்ளூ திராட்சை, தில்குஷ் திராட்சை வருகிறது. சித்ரதுர்கா, சிரா, கோலார், ஆந்திரா பகுதிகளில் இருந்து தர்பூசணி வருகிறது.

இடைத்தரகர்களின் தொந்தரவு இல்லாமல், விவசாயிகளுக்கு மார்க்கெட் வசதி செய்யவும், மக்களுக்கு ரசாயனம் கலக்காத தரமான பழங்கள், கிடைக்கும் வகையிலும் மேளாவுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

ஹாப்காம்ஸ் சொசைட்டி, தர்பூசணி சீசனில், தினமும் ஐந்து முதல் ஆறு லாரி லோடு பழங்களை, விவசாயிகளிடம் இருந்து வாங்கும். அதே போன்று இம்முறையும் வாங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us