தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எஸ்.எஸ்.எல்.சி., வினாத்தாள் கசிவு: தலைமை ஆசிரியர் உட்பட 6 பேர் கைது 

 எஸ்.எஸ்.எல்.சி., வினாத்தாள் கசிவு: தலைமை ஆசிரியர் உட்பட 6 பேர் கைது 

 எஸ்.எஸ்.எல்.சி., வினாத்தாள் கசிவு: தலைமை ஆசிரியர் உட்பட 6 பேர் கைது 


ADDED : ஜன 13, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., வினாத்தாள் கசிந்த வழக்கில், தலைமை ஆசிரியர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கர்நாடகாவில் வரும் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகள் நடக்க உள்ள நிலையில், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், ஆயத்த தேர்வுகள் நடக்க உள்ளன. இதுதொடர்பான வினாத்தாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சமூக வலைத்தளங்களில் வெளியானது. கல்வி அதிகாரிகள் அளித்த புகாரில், பெங்களூரு வடக்கு பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையின் போது 200 ரூபாய் முதல் 500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, வினாத்தாள்களை கசிய விட்டது தெரிந்தது. இந்த வழக்கில் துமகூரில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஷ், ராம்நகர், கலபுரகி மாவட்டத்தின் அம்ஜத்கான், ஷாஹிதா பேகம், பஹ்மிதா, முகமது சிராஜுதீன், பர்சானா ஆகிய ஆசிரியர், ஆசிரியைகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us