/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரயில் திட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை சந்தோஷ் லாட் மீது சோமண்ணா புகார்
/
ரயில் திட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை சந்தோஷ் லாட் மீது சோமண்ணா புகார்
ரயில் திட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை சந்தோஷ் லாட் மீது சோமண்ணா புகார்
ரயில் திட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை சந்தோஷ் லாட் மீது சோமண்ணா புகார்
ADDED : செப் 16, 2025 05:20 AM

பெங்களூரு: ''பெலகாவி - தார்வாட் இடையே நேரடி ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு, அமைச்சர் சந்தோஷ் லாட் ஒத்துழைக்கவில்லை,'' என, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா குற்றஞ்சாட்டினார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பெலகாவியில் இருந்து கித்துார் வழியாக தார்வாடிற்கு நேரடி ரயில் பாதை அமைக்க, மத்திய அரசு 937 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. பெலகாவி மாவட்டத்தில் 1,200 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. தார்வாட் மாவட்டத்தில் 45 ஏக்கர் நிலம் தான் தேவைப்படுகிறது. ஆனால் நிலத்தை கையகப்படுத்தப்பட்ட, தார்வாட் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சந்தோஷ் லாட் ஒத்துழைக்கவில்லை.
பெலகாவி - தார்வாட் இடையில் கித்துார் வழியாக ரயில் பாதை அமைந்தால், பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும். இரு நகரங்களுக்கு இடையிலான ரயில் இணைப்பும் அதிகரிக்கும்.
தார்வாட் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, எம்.பி., ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோரும் சந்தோஷ் லாட்டிடம் பேசினர். நானும் பல முறை அவரிடம் பேசிவிட்டேன். அவரிடம் இருந்து சாதகமான பதில் வரவில்லை.
இளைஞரான அவர் அரசியலில் இப்போது தான் வளர்கிறார். அவர் ஏன் இப்படி கீழ்மட்ட அரசியல் செய்கிறார் என்று தெரியவில்லை. மீண்டும் ஒரு முறை அவரை தேடிச் செல்வேன். அவர் ஒப்புக் கொள்ளாவிட்டால், திட்டத்தை வேறு வழியில் நிறைவு செய்வோம்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை, கர்நாடகாவுக்கு ரயில்வே திட்டத்திற்காக மத்திய அரசு 2,900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கனவுப்படி, நாட்டில் உள்ள ரயில் நிலையங்களின் பிம்பம் மாறி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.