/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு சாலைகளில் சீரமைக்க ரூ.4,800 கோடி நிதி ஒதுக்கீடு
/
பெங்களூரு சாலைகளில் சீரமைக்க ரூ.4,800 கோடி நிதி ஒதுக்கீடு
பெங்களூரு சாலைகளில் சீரமைக்க ரூ.4,800 கோடி நிதி ஒதுக்கீடு
பெங்களூரு சாலைகளில் சீரமைக்க ரூ.4,800 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : டிச 08, 2025 05:35 AM

பெங்களூரு: பெங்களூரில் மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க 4,800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய நிர்வாக அதிகாரியும், நகர மேம்பாட்டு துறை செயலருமான துஷார் கிரிநாத் கூறியதாவது:
பெங்களூரில் உள்ள பிரதான சாலைகள் உட்பட மோசமான நிலையில் உள்ள பல சாலைகளும் விரைவில் சரி செய்யப்படும். இதற்கு, 4,800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
சாலை சீரமைப்பு பணிகள், அடுத்த ஆண்டு மழைக்காலம் தொடங்குவதற்குள் முடிக்கப்படும். நகரில் ஒயிட் டாப்பிங் சாலை பணிகள் நடக்கின்றன. இதன் மதிப்பு 1,700 கோடி ரூபாயாகும். ஐ.டி., நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள பகுதிகளில் சாலை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
இந்த ஒட்டு மொத்த சாலை பணிகளும் 2026 செப்டம்பருக்குள் முடிவடையும். ஹெப்பால் சந்திப்பில் இருந்து கால்நடை மருத்துவ கல்லுாரி வரை சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும். இதற்காக, அடுத்த ஆண்டு டெண்டர் கோரப்படும். அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட எம்.ஜி., சாலையில் ஒயிட் டாப்பிங் பணிகள் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுவரை, நகரில் உள்ள சாலைகளில் 22,539 பள்ளங்கள் மூடப்பட்டு உள்ளன. மழை காரணமாக பள்ளங்கள் மூடும் பணியில் தாமதம் ஏற்பட்டது. தற்போது சரி செய்யப்படும். சாலையை துாய்மைப்படுத்தும் நவீன இயந்திரங்களுடன் கூடிய 46 வாகனங்கள் வாங்குவதற்கு முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

