/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோவில் பெயரில் மோசடி ராஜஸ்தான் நபர் கைது
/
கோவில் பெயரில் மோசடி ராஜஸ்தான் நபர் கைது
ADDED : டிச 22, 2025 05:35 AM
உடுப்பி: பிரசித்தி பெற்ற கொல்லுார் மூகாம்பிகை கோவில் பெயரில், போலியான இணையதளம் உருவாக்கி மோசடி செய்த, ராஜஸ்தான் நபர் கைது செய்யப்பட்டார்.
உடுப்பி மாவட்டம், பைந்துார் தாலுகாவின் கொல்லுாரில் உள்ள மூகாம்பிகை கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். கோவிலுக்கு அதிகாரப்பூர்வமான இணையதளம் செயல்படுகிறது. ஆனால் சமீப நாட்களாக, மர்ம நபர் ஒருவர், கொல்லுார் மூகாம்பிகை கோவிலின் பெயரில், போலியான இணையதளம் உருவாக்கினார்.
இதன் மூலம் பக்தர்களுக்கு, தங்கும் அறைகளை முன்பதிவு செய்து தருவதாக கூறி பணம் வசூலித்து, போலியான ரசீது கொடுத்து உள்ளார். இவ்விஷயம் கோவில் நிர்வாகத்தினர் கவனத்துக்கு வந்தது. பைந்துார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, பல கோணங்களில் விசாரித்தனர். ராஜஸ்தானின், திஜாரி மாவட்டத்தை சேர்ந்த நாசிர் ஹுசேன், 30, என்பவரை, நேற்று முன்தினம் உடுப்பியில் கைது செய்தனர். இவரிடம் இருந்து லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. இவரை பைந்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

