/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சர் ஜமீர் அகமது கானின் தனி செயலர் வீடுகளில்... 'ரெய்டு!' சொத்து குவிப்பு குற்றச்சாட்டில் லோக் ஆயுக்தா அதிரடி
/
அமைச்சர் ஜமீர் அகமது கானின் தனி செயலர் வீடுகளில்... 'ரெய்டு!' சொத்து குவிப்பு குற்றச்சாட்டில் லோக் ஆயுக்தா அதிரடி
அமைச்சர் ஜமீர் அகமது கானின் தனி செயலர் வீடுகளில்... 'ரெய்டு!' சொத்து குவிப்பு குற்றச்சாட்டில் லோக் ஆயுக்தா அதிரடி
அமைச்சர் ஜமீர் அகமது கானின் தனி செயலர் வீடுகளில்... 'ரெய்டு!' சொத்து குவிப்பு குற்றச்சாட்டில் லோக் ஆயுக்தா அதிரடி
ADDED : டிச 25, 2025 06:39 AM

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வீட்டு வசதித் துறை அமைச்சராக இருப்பவர் ஜமீர் அகமது கான். பெங்களூரு சாம்ராஜ்பேட் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக உள்ளார். ஜமீர் அகமது கானின் தனி செயலராக பணியாற்றுபவர் சர்தார் சர்ப்ராஸ் கான்.
இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, பெங்களூரு நகர லோக் ஆயுக்தா எஸ்.பி., சிவபிரசாத்துக்கு புகார்கள் சென்றன. அமைச்சரின் தனி செயலர் என்பது அரசு பதவி என்பதால், சர்தார் சர்ப்ராஸ் கான் வீடுகளில் சோதனை நடத்த, நீதிமன்றத்தின் அனுமதியை, லோக் ஆயுக்தா போலீசார் பெற்றனர்.
ஆவணங்கள் இந்நிலையில், நேற்று காலை 6:00 மணிக்கு பெங்களூரு ஹலசூரு ஏரிக்கரை அருகே உள்ள, சர்தார் சர்ப்ராஸ் கான் வீட்டிற்கு, எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில் 30க்கும் மேற்பட்ட, லோக் ஆயுக்தா போலீசார் சென்றனர். வீட்டில் சோதனை நடத்துவதற்காக நீதிமன்றத்தில் வாங்கிய அனுமதியை காட்டி, சோதனையை துவக்கினர்.
வீட்டில் இருந்த சர்தார் சர்ப்ராஸ் கான், அவரது குடும்ப உறுப்பினர்கள் மொபைல் போன்களை வாங்கி, 'சுவிட்ச் ஆப்' செய்தனர்.ஹலசூரு வீடு மட்டுமின்றி, பெங்களூரில் உள்ள மேலும் ஆறு வீடுகள், குடகில் உள்ள இரண்டு காபி தோட்ட அலுவலகங்கள், மைசூரின் எச்.டி.,கோட்டில் உள்ள பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
சம்பளம் ஹலசூரு வீட்டில் ஒரு இடத்தை கூட விடாமல் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. சொகுசு கார், பைக் வைத்திருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. சோதனையில் சிக்கிய சொத்து ஆவணங்களை, லோக் ஆயுக்தா போலீசார் எடுத்து சென்றனர்.
சர்ப்ராஸ் அகமது கானிடம், 'நீங்கள் எத்தனை ஆண்டுகள் அமைச்சரின் தனி செயலராக உள்ளீர்கள். அரசிடம் இருந்து எவ்வளவு சம்பளம் கிடைக்கிறது. நீங்கள் செய்யும் தொழில் என்ன. வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது' என்பது உட்பட பல கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
13 இடங்கள் இந்நிலையில், நேற்று இரவு லோக் ஆயுக்தா வெளியிட்ட அறிக்கை:
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த குற்றச்சாட்டில் வீட்டு வசதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரின் தனி செயலருக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில், நான்கு வீடுகள், 37 ஏக்கர் விவசாய நிலம் என, 8 கோடியே 44 லட்சத்து 33 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள், 1 கோடியே 64 லட்சத்து 20,000 ரூபாய் மதிப்பிலான நகைகள், 1 கோடியே 29 லட்சத்து 29 ஆயிரத்து 153 கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள், 5 கோடியே 93 லட்சத்து 86 ஆயிரத்து 153 ரூபாய் ரொக்கம் உட்பட 14 கோடியே 38 லட்சத்து 19,643 ரூபாய் மதிப்பிலான சொத்துகளை சட்டவிரோதமாக சேர்த்தது கண்டறியப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மோசடி மைசூரில் அமைச்சர் ஜமீர் அகமது கான் அளித்த பேட்டியில், ''சர்தார் சர்ப்ராஸ் கான் பெரிய பணக்காரர். அவரது தந்தை நிறைய சொத்துகளை விட்டு சென்று உள்ளார். அரசு பணியில் சேர்ந்து தான், சொத்து சேர்க்க வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை.
''மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டதால், எனது தனி செயலராக நியமித்தேன். அவரது வீடுகளில் எந்த அடிப்படையில், லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர் என்று தெரியவில்லை,'' என்றார்.
பணக்கார அமைச்சர் என்று கூறப்படும் ஜமீர் அகமது கான், காங்கிரஸ் மேலிடத்திற்கு மிகவும் நெருக்கமானவர். சித்தராமையாவின் தீவிர ஆதரவாளராகவும் உள்ளார். கடந்த 2019ல் சிவாஜிநகரில் செயல்பட்டு வந்த, ஐ.எம்.ஏ., ஜூவல்லரி உரிமையாளர் முகமது மன்சூர் கான், தங்க நகை சேமிப்பு திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்த 2,000 கோடி ரூபாயை மோசடி செய்து இருந்தார்.
மறுப்பு இவ்வழக்கு குறித்து விசாரித்த அமலாக்கத்துறை அளித்த தகவலின்படி, ஜமீர் அகமது கான் மீது அப்போதைய ஊழல் தடுப்பு படை வழக்குப்பதிவு செய்தது. பின், வழக்கு லோக் ஆயுக்தா விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு ஜமீர் அகமது கானும் அவ்வப்போது ஆஜராகி வருகிறார்.
ஐ.எம்.ஏ., ஜூவல்லரி மோசடி வழக்கு தொடர்பாக, அமைச்சரின் தனி செயலர் வீட்டில் சோதனை நடந்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதை ஜமீர் அகமது கான் மறுத்தார். 'சர்தார் சர்ப்ராஸ் கான் வீட்டில் நடந்த சோதனைக்கும், எனது வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, கூறி உள்ளார்.

