/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரேஷன் பொருட்கள் பெற அல்லல்படும் பொதுமக்கள்
/
ரேஷன் பொருட்கள் பெற அல்லல்படும் பொதுமக்கள்
ADDED : டிச 21, 2025 05:16 AM
தங்கவயல்: ரேஷன் கடைகளில், அரிசி மற்றும் பிற தானியங்களை பயனாளிகள் பெற, பயோமெட்ரிக் முறையை, மாநில அரசு கட்டாயமாக்கி உள்ளது. தங்கவயல் தாலுகா முழுதும், பயோமெட்ரிக் சரியாக செயல்படாததால், ரேஷன் பொருட்களை பெற, பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
சர்வர் கோளாறே பிரச்னைக்கு காரணம் என்கின்றனர் அதிகாரிகள். பயோமெட்ரிக்கில் கைரேகையை பதிவு செய்தவுடன், ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும். ஆனால், சில
ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் பதிவை பெற்ற மறுநாள், ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தி வருகின்றனர். இதனால், ரேஷன் பொருட்கள் வாங்க ஒவ்வொருவரும் இரண்டு நாட்கள் காத்திருக்க நேரிடுகிறது.
ரேஷன் கடைகளுக்கு முன் உட்கார நிழலோ அல்லது வேறு ஏற்பாடுகளோ செய்யப்படவில்லை. அதனால், காலையில் ரேஷன் வாங்க வந்தால் மாலை வரை உணவு, தண்ணீர், இல்லாமல் காத்திருக்க வேண்டும். சாப்பிடவும் கழிப்பறைக்கு செல்லவும் முடியாது என, மஸ்கம் ரேஷன் கடைக்கு முன் காத்திருந்த பெண் ஒருவர் கூறினார்.
தங்கவயல் நகரில், 49 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. ரேஷன் பொருட்கள் வந்த பிறகு மாத இறுதிவரை ரேஷன் வினியோகஸ்தர்கள் ரேஷன் பொருட்கள் விநியோகிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான கடைகளில் ரேஷன் பொருட்கள் ஓரிரு நாட்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டு, பின் கதவுகள் மூடப்ப டுவதாக புகார்கள் வருகின்றன.
'ப யோமெட்ரிக்கில் பயனாளிகளின் விரல் ரேகையை பதிவதில் சர்வர் பிரச்னை உள்ளது. இந்த பிரச்னை எல்லா இடங்களிலும் உள்ளது. இதுகுறித்து மூத்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரச்னை தீர்க்கப்படும்' என்கின்றனர், ரேஷன் ஊழியர்கள்.
'அனை த்து ரேஷன் கடைகளிலும், 30ம் தேதிக்குள் கட்டாயமாக ரேஷன் பொருட்கள் வினியோகிக்க வேண்டும். தவறினால், புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கோலார் மாவட்ட உணவு பொருட்கள் வழங்கல் துறையின் உதவி இயக் குனர் மல்லி கர்ஜுனா தெரிவித்தார்.

