/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எடியூரப்பா மீது 'போக்சோ' செப்., 2க்கு ஒத்திவைப்பு
/
எடியூரப்பா மீது 'போக்சோ' செப்., 2க்கு ஒத்திவைப்பு
ADDED : ஆக 24, 2025 05:39 AM

பெங்களூரு: தன் மீது தொடரப்பட்ட 'போக்சோ' வழக்கை, விசாரணை நீதிமன்றம் புதிதாக விசாரணை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரி, பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை, செப்., 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பெங்களூரில் தன் இல்லத்துக்கு வந்த சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதாசிவ நகர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்குப் பதிவானது. பின், இவ்வழக்கு சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கை ரத்து செய்யும்படி, எடியூரப்பா தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேவேளையில், புதிதாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மீண்டும் எடியூரப்பா மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு நேற்று நீதிபதி அருண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது எடியூரப்பா தரப்பு வக்கீல் வாதிடுகையில், ''என் மனுதாரர் மீது புகார் அளித்த பெண்ணுக்கு இது தான் பொழுதுபோக்கே. இதுபோன்று பலர் மீது புகார் அளித்துள்ளார். அத்துடன், அவ்வாறு எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று அங்கிருந்த சாட்சியங்களும் கூறி உள்ளன,'' என்றார்.
இதை கேட்ட நீதிமன்றம், விசாரணையை, செப்., 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது.