ADDED : பிப் 14, 2026 04:55 AM
விஜயபுரா: மூளை செயலிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள், தானம் செய்யப்பட்டன.
பாகல்கோட்டையை சேர்ந்தவர் பலராமா, 30. இவர் பிப்ரவரி 9ம் தேதியன்று, பைக்கில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது; பைக்கை ஓட்டிய சித்து என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலராமா பலத்த காயம் அடைந்தார். இவரை விஜயபுரா நகரின் பி.எல்.இ.டி., மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல், மூளை செயல் இழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, குடும்பத்தினர் முன் வந்தனர். டாக்டர்கள் சட்ட நடைமுறைகளை முடித்து, நேற்று முன் தினம் நள்ளிரவு உடல் உறுப்புகளை பெற்றுக்கொண்டனர்.
ஒரு சிறு நீரகம், ஜீரோ டிராபிக் வசதியில் கலபுரகி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் பி.எல்.இ.டி., மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு பொருத்தப்பட்டது.
