/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒரு கிலோ மட்டன் ரூ.900; அசைவ பிரியர்கள் 'ஷாக்'
/
ஒரு கிலோ மட்டன் ரூ.900; அசைவ பிரியர்கள் 'ஷாக்'
ADDED : டிச 22, 2025 05:28 AM
பெங்களூரு: கிறிஸ்துமஸ் பண்டிகை, குளிரான வானிலையால் ஆட்டிறைச்சியின் தேவை அதிகரித்து, 1 கிலோ மட்டன் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பெங்களூரில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால், மாலை வேளையில் பஜ்ஜி, போண்டா, சமோசா, சூப் போன்ற சூடான உணவுகளை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இதில், அசைவ வகை சூப்களுக்கு மவுசு அதிகம். 'ஆட்டுக்கால்' சூப் பலரது விருப்பமான தேர்வாக இருக்கிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால், பலரும் தங்கள் வீடுகளில் ஆட்டிறைச்சியில் அசைவ விருந்து செய்து வருகின்றனர். இதனால், அதன் தேவை அதிகரித்து உள்ளது.
இதனால், 1 கிலோ மட்டன் 900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே நிலை தொடர்ந்தால் ஆங்கில புத்தாண்டிற்குள் ஒரு கிலோ மட்டன் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

