தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தலைமறைவு எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக 'லுக் அவுட் நோட்டீஸ்'

 தலைமறைவு எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக 'லுக் அவுட் நோட்டீஸ்'

 தலைமறைவு எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக 'லுக் அவுட் நோட்டீஸ்'


ADDED : பிப் 12, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜுக்கு எதிராக, தேடப்படும் நபர் என்ற 'லுக் அவுட்' நோட்டீசை, சி.ஐ.டி., பிறப்பித்து உள்ளது.

பெங்களூரு பாரதிநகர் ரவுடி சிவகுமார் என்ற பிக்லு சிவா கொலை வழக்கில், கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

இவ்வழக்கை விசாரிக்கும் சி.ஐ.டி., அதிகாரிகள், எம்.எல்.ஏ.,வை கைது செய்து, தங்கள் காவலில் எடுக்க முயற்சித்தனர்.

கைதில் இருந்து தப்பிக்க பைரதி பசவராஜ் தாக்கல் செய்த, முன்ஜாமின் மனு, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆன நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் உயர் நீதிமன்றத்திலும் தள்ளுபடி ஆனது. இதனால் எம்.எல்.ஏ.,வை கைது செய்ய, சி.ஐ.டி., அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர். மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்து தலை மறைவானார்.

சி.ஐ.டி., நடத்திய விசாரணையில், ஒரு வாரத்திற்கு முன்பே அவர் துபாய் தப்பி சென்றது தெரிந்தது. அங்கிருந்து வேறு எங்கும் தப்பி செல்லாமல் இருக்க, தேடப்படும் நபர் என்ற லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த கொலை வழக்கின் முதல் குற்றவாளியான ஜெகதீஷும், துபாய் தப்பி சென்றார். அவருக்கு எதிராகவும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. துபாயில் இருந்து வந்த அவர், டில்லி விமான நிலையத்தில் கைதானது குறிப்பிடத்தக்கது.

உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், '' பைரதி பசவராஜ் தானாக வந்து சரண் அடைந்தால் நல்லது. இல்லாவிட்டால் போலீசார் அவரை தேடி சென்று கைது செய்வர்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us