sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

நான்கு அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா...  'ரெய்டு!' பல கோடி பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல்

/

நான்கு அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா...  'ரெய்டு!' பல கோடி பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல்

நான்கு அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா...  'ரெய்டு!' பல கோடி பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல்

நான்கு அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா...  'ரெய்டு!' பல கோடி பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல்


ADDED : டிச 24, 2025 06:07 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

பாகல்கோட், விஜயபுரா, உத்தர கன்னடா, ராய்ச்சூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள, நான்கு அரசு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் லோக் ஆயுக்தாவினர் ரெய்டு நடத்தினர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு, லஞ்சம் வாங்கியதாக கிடைத்த தகவலில் நடந்த ரெய்டில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள், பணம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கர்நாட காவில் லஞ்சம் வாங்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக, லோக் ஆயுக்தா இயங்கி வருகிறது. இந்த அமைப்பினர், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் குறித்த தகவலில், அவ்வப்போது ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், தொடர்ச்சியாக லஞ்சம் வாங்குவதாகவும், நான்கு அரசு அதிகாரிகள் குறித்த ரகசிய தகவல் சமீபத்தில் கிடைத்தது.

அதனடிப்படையில், பாகல்கோட், விஜயபுரா, உத்தர கன்னடா, ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்களில் காலை, 6:00 மணிக்கே ரெய்டு துவங்கியது. பாகல்கோட் ஜில்லா பஞ்சாயத்து கூடுதல் செயலர் ஷியாம்சுந்தர் காம்பலே, விஜயபுரா வேளாண்மை கூடுதல் இயக்குநர் மாலப்பா, கார்வார் கிராம அலுவலர் மாருதி யஷ்வந்த் மால்வி, ராய்ச்சூர் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை உதவி செயற்பொறியாளர் விஜயலட்சுமி ஆகியோர் வீடுகள் மற்றும் அவர் களுக்கு சொந்தமான இடங்களில் தான், இந்த ரெய்டு நடந்தது.

பணம் பறிமுதல் பாகல்கோட்டில் உள்ள காம்பலேவின் அலுவலகம், கதக்கில் உள்ள அவரது வீடு ஆகிய இடங்களில் லோக் ஆயுக்தா எஸ்.பி., சுரேஷ் ரெட்டி தலைமையில் ரெய்டு நடந்தது. இதில், கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், பணம் போன் றவை கைப்பற்றப்பட்டன.

விஜயபுராவில் உள்ள மாலப்பாவின் அலுவலகம், அவரது மாமனார் வீடு, பண்ணை வீடு, சொந்தமான வாகனங்கள் ஆகியவற்றில் லோக் ஆயுக்தா எஸ்.பி., மல்லேஷ் தலைமையில் ரெய்டு நடந்தது. அதில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

உத்தர கன்னடாவின் கார்வாரில் உள்ள யஷ்வந்த் மால்வியின் அலுவலகம், அவரது வீடு, துணிக்கடைகளில் லோக் ஆயுக்தா எஸ்.பி., தன்யா நாயக் தலைமையில் சோதனை நடந்தது.

இதில், சில ஆவணங்களும், முறையான ஆவணமின்றி இருந்த கட்டுக் கட்டாக பணமும் கைப்பற்றப்பட்டது.

பண்ணை வீடு ராய்ச்சூரில் விஜயலட்சுமியின் அலுவலகம், ராய்ச்சூர், யாத்கிர், சிந்தனூர், ஜோலட்ஹெகட்டி ஆகிய இடங்களில் உள்ள அவருக்கு சொந்தமான இடங் களில் லோக் ஆயுக்தா எஸ்.பி., சிட்குப்பி தலைமையில் சோதனை நடைபெற்றது.

அவரது, 49 சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. யாத்கிரில் 25 ஏக்கர் நிலம், பண்ணை வீடுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

ஒரே நேரத்தில் பல இடங்களில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான ரெய்டு வாயிலாக, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள், பணம், தங்க நகைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.

எவ்வளவு கோடி ரூபாய்க்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பதை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர். இந்த விபரம் பின்னர் வெளியிடப்படும்.

லஞ்சம்

வாங்கியதற்காக

நேற்று

கைதானவர்கள்

பெங்களூரு சிக்கஜாலா போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் ஷிவண்ணா 50,000 லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார். அவரை லோக் ஆயுக்தா அதிகாரிகள் கைது செய்தனர். இதேபோல, கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் டேட்டா ஆப்பரேட்டராக பணிபுரியும் சவிதா பெல்லிகட்டி 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us