தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வாகனம் மோதியதில் சிறுத்தை குட்டி பலி

 வாகனம் மோதியதில் சிறுத்தை குட்டி பலி

 வாகனம் மோதியதில் சிறுத்தை குட்டி பலி


ADDED : நவ 30, 2025 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாவேரி: சாலையை கடக்க முயன்ற சிறுத்தை குட்டி மீது வாகனம் மோதியதில், சிறுத்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

ஹாவேரி மாவட்டம், ஷிகான் தாலுகாவில் கொனகெரே கிராமம் உள்ளது. இந்த கிராமம், வனப்பகுதிக்கு அருகே உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சாலைகளில் சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் சாலையில் நடமாடுவது வழக்கம். இதனால், வாகன ஓட்டிகள் வேகமாக செல்லக்கூடாது என்ற எச்சரிக்கை பலகைகள், சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு, சாலையை சிறுத்தை குட்டி கடக்க முயன்றது. அவ்வழியாக வந்த வாகனம் சிறுத்தை குட்டி மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து, எந்த தகவலும் வனத்துறைக்கு தெரிவிக்காமல், வாகன ஓட்டி தப்பிச் சென்றுவிட்டார். இதையறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

அவர்கள் கூறியதாவது:

வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 வயது பெண் சிறுத்தை குட்டி உயிரிழந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய வாகனம் அடையாளம் காணும் பணிகள் நடக்கின்றன. வாகன ஓட்டியை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. வாகனத்தை ஓட்டிச் சென்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us