தாமதமாக வந்தவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி மறுப்பு
தாமதமாக வந்தவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி மறுப்பு
ADDED : ஜூன் 21, 2026 10:46 PM

பெங்களூரு: பெங்களூரு, கொப்பாலில் தாமதமாக வந்த நான்கு மாணவியருக்கு, 'நீட ் ' மறுதேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.
கர்நாடகாவில், பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும், 150 மையங்களில் மறுதேர்வு நடந்தது.
சரியாக மதியம், 2:00 மணிக்கு தேர்வுகள் துவங்கின. மாணவ மாணவியர் 1:00 மணி முதலே தேர்வு மைய வளாகத்திற்குள் வர துவங்கினர்.
மதியம் 1:30 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், பெங்களூரு ஆர்.சி., கல்லுாரியில் சரியாக 1:30 மணிக்கு நுழைவுவாயில் மூடப்பட்டது. அதன் பின் தேர்வு எழுத வந்த மூன்று மாணவியருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாணவியரும், பெற்றோரும் எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அதுபோல, கொப்பாலில் தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்த ஒரு மாணவிக்கும் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. மாணவியர் அணிந்து வந்திருந்த மூக்குத்தி, கம்மல்களை பாதுகாப்பு ஊழியர்கள் அகற்றினர்.
மாணவியர் கை, கழுத்தில் கட்டி இருந்த கயிறுகள், சட்டை காலர்களும் வெட்டி அகற்றப்பட்டன.
